துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 9 Dec 2022 1:59 AM IST (Updated: 9 Dec 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

வல்லமை பொருந்திய மனம் படைத்த துலா ராசி அன்பர்களே!

பெரும்பாலும் நற்பலன்களே ஏற்படும். பொருளாதார நிலையில் திடீரென முன்னேற்றம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் நினைத்தபடி நன்மைகளை அடைவார்கள். உயர் அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.

தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்துவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடு இன்றி செயல்பட்டால்தான் வெற்றிபெற முடியும். கலைஞர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பழைய வாய்ப்புகளின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் குறைவிருக்காது.

மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டம் இதுவாகும். எல்லோருடைய பாராட்டுக்களையும் பெறும் அளவு, பெண்கள் குடும்பத்தைப் பொறுப்பாக நடத்துவார்கள்.

பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு தீபமேற்றி வழிபட்டால் முன்னேற்றம் ஏற்படும்.


Next Story