டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு


டெஸ்ட் சாம்பியன்ஷிப்:  இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 April 2023 11:19 AM IST (Updated: 25 April 2023 11:33 AM IST)
t-max-icont-min-icon

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் அணியில் அனுபவ வீரரான ரஹானே மீண்டும் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியா மோதுகிறது.உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ராகுல், அஸ்வின், பரத், ரஹானே, ஜடேஜா, அக்சர் பட்டே, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில் அனுபவ வீரரான ஜின்கியா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தால் அவதிப்படும் பும்ரா, ஸ்ரேயர்ஸ் அய்யர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் மாதம் 7- தேதி லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.


Next Story