2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகா ஒதுக்க பரிந்துரை: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு...?
தங்கம் தென்னரசுக்கு மின் துறை,முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வு துறை ஒதுக்கீடு என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில்,தமிழக அமைச்சர்களின் இலாகா மாற்றங்கள் தொடர்பாக கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தங்கம் தென்னரசுக்கு மின் துறையும், முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு என தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில்பாலாஜி கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்ற கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story