உலகக்கோப்பை கால்பந்து : ஆஸ்திரேலிய அணியின் மார்ட்டின் பாய்லே காயம் காரணமாக விலகல்


உலகக்கோப்பை கால்பந்து : ஆஸ்திரேலிய அணியின் மார்ட்டின் பாய்லே காயம் காரணமாக விலகல்
x

Image Tweet @Football_Scot 

முழங்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் மார்ட்டின் பாய்லே இந்த உலக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்

தோகா,

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. கால்பந்து ரசிகர்களை கட்டிபோடப்போகும் இந்த திருவிழா டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் அரங்கேறுகிறது. அங்குள்ள 5 நகரங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் 8 மைதானங்களில் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் முழங்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் மார்ட்டின் பாய்லே இந்த உலக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். மார்ட்டின் பாய்லேக்கு பதிலாக மார்கோ டிலியோ அணியில் சேர்க்கப்பட்டுளார்.


Next Story