கமல சாய்பாபா கோவிலில் 108 கலச அபிஷேகம் விழா


கமல சாய்பாபா கோவிலில் 108 கலச அபிஷேகம் விழா
x

கமல சாய்பாபா கோவிலில் 108 கலச அபிஷேகம் விழா 20-ந்தேதி நடக்கிறது

புதுச்சேரி

புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி எதிரே உள்ள கமல சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை மண்டப 20-ம் ஆண்டு விழா மற்றும் 108 கலச அபிஷேக விழா வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு கொடியேற்றம், 9 மணிக்கு கோ பூஜை, வடுக பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, குருபூஜை, பகல் 12 மணிக்கு ஆரத்தி, அன்னதானம் நடக்கிறது.

மாலை 4 மணிக்கு முதல் கால யாக பூஜை, விக்னேஷ்வர பூஜை, கலச ஸ்தாபனம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆரத்தி எடுத்து பிரசாரம் வழங்கப்படுகிறது.


Next Story