வீடு புகுந்து 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை


வீடு புகுந்து 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
x

கோட்டுச்சேரி அருகே வீடு புகுந்து 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

கோட்டுச்சேரி அருகே வீடு புகுந்து 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் கன்சிராம் (வயது 27). சரக்கு வேன் டிரைவர். இந்தநிலையில் நேற்று இரவு கோட்டுச்சேரி அருகே வீட்டில் 16 வயது சிறுமி தனியாக இருந்துள்ளார்.

இதையறிந்த கன்சிராம் அந்த வீட்டுக்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சல் போட்டாள். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

வேன் டிரைவர் கைது

இதனால் பயந்து போன கன்சிராம் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.



Next Story