ஜிப்மரில் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்படும்


ஜிப்மரில் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்படும்
x

ஜிப்மரில் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கவர்னர் தமிழிசையிடம் உறுதியளித்துள்ளது.

புதுச்சேரி

ஜிப்மரில் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கவர்னர் தமிழிசையிடம் உறுதியளித்துள்ளது.

மக்கள் மருந்தகம்

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நேற்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வினை தொடர்ந்து கவர்னர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜிப்மரில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர், தட்டுப்பாடு இல்லாமல் குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில் மக்கள் மருந்தகம் தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதையும் காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

குறைகள் சரிசெய்யப்படும்

அதேபோல் மருந்து சீட்டுகள் எழுதும்போது குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகளின் பெயர்களை எழுதுவதை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக மருந்துகளை பொதுப்பெயரை எழுத வேண்டும் என்று எடுத்துக்கூறினார். நோயாளிகளின் உறவினர்கள் தங்கிட அடையாள அட்டை வழங்கி இலவசமாக தங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மருத்துவமனையின் தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு முழுநேர மக்கள் தொடர்பு அதிகாரியை நியமிக்கவேண்டும், நோயாளிகளின் வசதிக்காக தகவல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். கூட்டத்துக்கு பிறகு மத்திய சுகாதார அமைச்சகத்தை தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர்கள், சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று தெரிவித்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுளளது.


Next Story