அரசு ஊழியர் பெயரில் கார் வாங்கி ரூ.9½ லட்சம் மோசடி


அரசு ஊழியர் பெயரில் கார் வாங்கி ரூ.9½ லட்சம் மோசடி
x

அரசு ஊழியர் பெயரில் கார் வாங்கி ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்த டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி

அரசு ஊழியர் பெயரில் கார் வாங்கி ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்த டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு ஊழியர்

அரியாங்குப்பம் டி.என்.பாளையம் உடையார் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). இவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு நன்கு அறிமுகமான பாகூர் கீழ்பரிக்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் தர்மதுரை (30). டிரைவரான இவர் சரியான வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தர்மதுரை, சுரேஷிடம் அவரது பெயரில் கடனுக்கு கார் வாங்கித்தரும்படி கூறினார். இதையடுத்து ரூ.13 லட்சத்திற்கு கார் ஒன்று வாங்கிய தர்மதுரைக்கு கொடுத்தார். அந்த காருக்கு மாத தவணையை கடந்த ஜனவரி மாதம் வரை தர்மதுரை செலுத்தி வந்தார். அதன்பிறகு மீதமுள்ள ரூ.9 லட்சத்து 60 ஆயிரத்துக்கான தவணைத் தொகையை செலுத்தவில்லை.

மோசடி

இதுதொடர்பாக வங்கியில் இருந்து சுரேசுக்கு தவணைத்தொகையை செலுத்தும்படி நோட்டீஸ் வந்தது. இதுகுறித்து சுரேஷ், தர்மதுரையிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. இதற்கிடையே தர்மதுரை கடன் மூலம் வாங்கிய காரை விற்பனை செய்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் தர்மதுரை மீது மோசடி வழக்கு உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story