ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

காரைக்காலில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரெயில்களை இயக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காரைக்கால்

கொரோனா அதிகரிப்பால் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி காரைக்கால் மாவட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கத்தினர் ரெயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் யாசின் தலைமை தாங்கினார். காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம், நாகை முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், காரைக்கால் மாவட்ட ெரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் அன்சாரிபாபு, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் ஆனந்தகுமார் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனாவால் நிறுத்தப்பட்ட காரைக்கால்- பெங்களூரூ விரைவு ரெயில், திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில், தஞ்சாவூர்-காரைக்கால்-வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்ட டெமோ ரெயில் ஆகியவற்றை மீண்டும் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story