போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் ஐ.ஜி. சந்திரன் கலந்துகொண்டாா்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் முழுவதும் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து புதுச்சேரி போதை பொருட்கள் தடுப்பு பிரிவு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் வளாகத்தில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி. சந்திரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். நிழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக போலீஸ் ஐ.ஜி.சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'புதுச்சேரி மாநிலத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் புதுச்சேரி காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முழுமையாக ஒழிக்கும் வரை போலீசாரின் நடவடிக்கை தொடரும்' என்றார்.


Next Story