வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.25 லட்சம் மோசடி


வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக   ரூ.25 லட்சம் மோசடி
x

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த போலி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த போலி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டில் வேலை

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிளவேந்திரன் (வயது 60). இவர் தனது மகன்களை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்ப முடிவு செய்தார். இதற்காக அவர் தென்னஞ் சாலையில் உள்ள வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு இருந்த அதன் உரிமையாளர் பிரசாத் (42) என்பவரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், பிளவேந்திரனின் மகன்களுக்கு பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ரூ.4 லட்சத்தை பிரசாத்திடம் பிளவேந்திரன் கொடுத்தார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தராவில்லை.

தலைமறைவு

எனவே கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பிளவேந்திரன் பிரசாத்திடம் கேட்டார். ஆனால் வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் பிரசாத் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிளவேந்திரன், உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை வலைவீசி தேடி வந்தார்.

ரூ.25 லட்சம் மோசடி

இந்தநிலையில் புதுவை புதிய பஸ்நிலையம் அருகே பிரசாத் நிற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து கைது


Next Story