ஞானமுத்து வீரவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


ஞானமுத்து வீரவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x

வேல்.சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடந்த ஞானமுத்து வீரவிநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார்.

புதுச்சேரி

புதுவை வள்ளலார் சாலையில் உள்ள வேல்.சொக்க நாதன் திருமண நிலையத்தில் ஞானமுத்து வீரவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. விநாயகருக்கு வெள்ளிகவசமும் அணிவிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ்குமார், வி.பி.ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து உள்பட பலர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேக விழாவுக்கு வந்தவர்களை வேல்.சொ.இசைக் கலைவன், ஞானமுத்து வீரவேல் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.


Next Story