ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

காரைக்காலில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால்

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்காலை அடுத்த தலத்தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, கட்சி நிர்வாகிகள் பஷீர், சுப்பையன், கருணாநிதி, முரளி, காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்ப பெறவேண்டும். 'அக்னிபத்' திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.


Next Story