காரைக்காலில் சுகாதார அவசர நிலை வாபஸ்


காரைக்காலில் சுகாதார அவசர நிலை வாபஸ்
x

காரைக்காலில் காலரா கட்டுக்குள் வந்ததால் சுகாதார அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது.

காரைக்கால்

காரைக்காலில் காலரா கட்டுக்குள் வந்ததால் சுகாதார அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது.

காலரா பரவல்

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த மாதம் காலரா பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி முதல் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் காலரா ஒழிப்பு பணியில் சுகாதாரம், பொதுப்பணி, வருவாய் உள்ளிட்ட அரசுத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுகாதார அவசர நிலை வாபஸ்

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையால் காலரா பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த 2 வாரங்களாக காலரா பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து காரைக்காலில் பிறப்பிக்கப்பட்ட சுகாதார அவசர நிலை திரும்பப் பெறப்படுவதாக (வாபஸ்) சுகாதராத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.


Next Story