விபத்துகளை தடுக்க சாலையில் ஒளிரும் தடுப்புகள்


விபத்துகளை தடுக்க சாலையில்  ஒளிரும் தடுப்புகள்
x

விபத்துகளை தடுக்க சாலையின் நடுவே ஒளிரும் தன்மையுடைய தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி

விபத்துகளை தடுக்க சாலையின் நடுவே ஒளிரும் தன்மையுடைய தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

விபத்துகள்

புதுவையில் சாலைகளின் நடுவில் பெரும்பலான இடங்களில தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ள. சில இடங்களில் ஒரு அடி உயரமுடைய சிமெண்டு கற்கள் வைக்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டி வருபவர்கள் தூக்க கலக்கம் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக இந்த சிமெண்டு கற்களின் மீது வாகனங்களை ஏற்றி விடுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

நவீன தடுப்புகள்

இதனை தவிர்க்கும் விதமாக தற்போது முக்கிய சாலைகளில் சாலை தடுப்புக்காக ரப்பர் கலந்து பிளாஸ்டிக்கால் ஆன நவீன தடுப்புகள் (ஸ்பிரிங் பிளக்சிபிள் டெலினேட்டர்) பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏழுமலை மற்றும் போக்குவரத்து போலீசாரால் பொருத்தப்பட்டு வருகின்றன. புதுவை அண்ணா சாலை, பஸ் நிலையம், சுப்பையா சிலை, உப்பளம் சாணரப்பேட்டை சந்திப்பு, ராஜா தியேட்டர் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த தடுப்புகள் வைக்கப்பட உள்ளன. இந்த தடுப்புகள் வாகனங்களின் ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்க கூடிய தன்மையுடையவை ஆகும். 300 மீட்டர் தொலைவில் வாகனங்கள் வருமபோது, அதன் முகப்பு ஒளிபட்டு பிரதிபலிக்கும் தன்மையுடையதாக இது உள்ளது. இதனால் டிரைவர்கள் சுதாரித்துக்கொண்டு வாகனங்களை இயக்கும் வாய்ப்பு உள்ளது.

பாதிப்பு இல்லை

மேலும் அதன் மீது வாகனங்கள் மீது மோதினாலும் மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடும். சுமார் 3 அடி உயரம் உள்ள இந்த தடுப்பில், வாகனங்கள் மோதினால் வாகனத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story