பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா கொடியேற்றம்


பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா கொடியேற்றம்
x

பூரணாங்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

அரியாங்குப்பம்

புதுவை பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு சாகை வார்த்தல், வில்லு குட்டி ஐயனாரப்பன் கோவிலுக்கு குதிரை விட்டு பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கரகம் புறப்பாடு மற்றும் வீதி உலாவும் கொடியேற்றமும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா, துணைத்தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமிர்தலிங்கம் மற்றும் கிராம மக்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி தீமிதி நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story