தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்


தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்
x

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சபாநாயகர் செல்வம் நிவாரண உதவி வழங்கினார்.

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகாமி (வயது 65). இவருடைய குடிசை வீடு தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சபாநாயகர் செல்வம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் ரூ.9,700-ம், தனது சொந்த செலவில் ரூ.5 ஆயிரமும் சபாநாயகர் செல்வம் வழங்கினார். மேலும் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பிரேம் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, பா.ஜ.க. நிர்வாகிகள் குமாரசாமி, சக்திபாலன், ஆனந்தன், திருஞானம், முனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story