அண்ணன்-தம்பியை தாக்கிய ரவுடிகள்


அண்ணன்-தம்பியை தாக்கிய ரவுடிகள்
x

அண்ணன்-தம்பியை தாக்கிய ரவுடிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் அடுத்த தர்மாபுரி தனகோடி நகரில் வசிப்பவர் கார்த்திக் (வயது 29). கார் டிரைவர். அவரது மனைவி சங்கீதா. நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவுடிகளான சண்முகாபுரத்தை சேர்ந்த குட்டி அருண், உழவர்கரையை சேர்ந்த அப்பு ஆகியோர் கார்த்திக் வெளியே வருமாறு கத்தினர்.

சத்தம் கேட்டு வெளியே வந்த கார்த்திக்கிடம் 2 பேரும் தகாத வார்த்தையால் பேசியதுடன், பீர்பாட்டிலால் தாக்கியதாக கூறப் படுகிறது. இதை தடுக்க முயன்ற கார்த்திக்கின் தம்பி காவியனையும் (27) அவர்கள் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் கார்த்திக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story