கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

காரைக்கால் ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் காரைக்கால் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகப்பட்டினம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகாந்த் (வயது 33) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர், விஜயகாந்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story