சட்டசபை தேர்தல் - 2021

ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தோல்வி + "||" + AIADMK candidate Jayakumar lost in Rayapuram constituency

ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தோல்வி

ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தோல்வி
சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி 49,143 வாக்குகள் பெற்றுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் இன்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 157 இடங்களிலும், அதிமுக 77 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

அனைத்து தொகுதிகளிலும் பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி 49,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 30,061 வாக்குகள் பெற்றுள்ளார்.