கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு + "||" + Match officials for ICC World Test Championship Final announced

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சவுதாம்ப்டன்,

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது.  இதில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று உள்ளது. 

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிந்த பிறகு,  இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4  ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 14 -ல்முடிவடைகிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. கவுன்சில் கூட்டம்: காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
2. ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் ஜப்பானை சந்திக்கிறது
ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.
3. இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை
இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே 2+2 பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
4. “இந்தியா போட்டியை இழந்தது” என வெளியிட்ட அறிக்கையை மாற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா அச்சுறுத்தால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை!
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.