சினிமா செய்திகள்

பாலியல் புகார்: கின்னஸ் சாதனையாளர் தெலுங்கு பாடகர் கஜல் சீனிவாஸ் கைது + "||" + Popular Telugu singer Ghazal Srinivas arrested on charges of sexual

பாலியல் புகார்: கின்னஸ் சாதனையாளர் தெலுங்கு பாடகர் கஜல் சீனிவாஸ் கைது

பாலியல் புகார்: கின்னஸ் சாதனையாளர் தெலுங்கு பாடகர் கஜல் சீனிவாஸ் கைது
கின்னஸ் சாதனையாளர் பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். #singersrinivas #sexualharassment.
ஐதராபாத், 

பிரபல தெலுங்கு பாடகர் கேசிராஜு சீனிவாஸ். இவர் கஜல் பாடல்கள்  பாடி புகழ்  பெற்றதால் கஜல் சீனிவாஸ் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் ‘ஆலயவாணி’ என்ற பெயரில் ‘வெப் ரேடியோ’ நடத்தி வருகிறார். இங்கு 29 வயது பெண் ரேடியோ வர்ணணையாளராக பணியாற்றி வந்தார்.

குட்டா போலீஸ் நிலையத்தில் பாடகர் சீனிவாஸ் மீது   பரபரப்பு  புகார் கொடுத்தார்.  அதில் சீனிவாஸ் தன்னை  நீண்ட  நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக தெரிவித்து இருந்தார்.

புகாரை பதிவு  செய்த போலீசார்  விசாரணை நடத்தி வந்தனர் . இன்று அதிகாலையில் சீனிவாஸ் கைது  செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாடகர் சீனிவாஸ் கடந்த 2008-ம் ஆண்டு காந்தி நினைவு நாளில் நடந்த நிகழ்ச்சியில் 76 மொழிகளில் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை  படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் சீனிவாஸ் “ஏ பிலிம் பை அரவிந்த்” என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

புகார் பற்றி பாடகர் சீனிவாஸ் கூறுகையில், “அந்த பெண் என் மகள் போன்றவர். சமீபத்தில் விபத்தில் இடது தோள்பட்டையில் அவருக்கு காயம்  ஏற்பட்டதால் என்னை மசாஜ்  செய்து விடச் சொன்னார். இதற்கு என்னிடம் மருத்துவ ஆதாரம் இருக்கிறது. அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை” என்றார்.

புகார் கொடுத்த பெண் கூறுகையில், “சீனிவாஸ் என்னிடம் கடந்த 8 மாதங்களாகவே தவறாக நடந்து வருகிறார். பலமுறை கண்டித்தும் அவர் மாறவில்லை. சமீபத்தில் அவரது தொந்தரவு எல்லை மீறிப் போகவே புகார் செய்தேன்” என்றார்.

#Singersrinivas | #Sexualharassment  | #Cinemanews


தொடர்புடைய செய்திகள்

1. அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2. அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் நடிகை ஸ்ரீ ரெட்டி ஆவேசம்
அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள் என நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசமாக கூறி உள்ளார். #SriReddy #Varahi
3. தம் இருந்தா நேர்ல வந்து பேசு; நான் தயார்- நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்
என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்கள்,கோழைதான் கொல்வேன் என்பான், தம் இருந்தா நேர்ல வந்து பேசு;நான் தயார் என்று ஆவேசமாக பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். #PrakashRaj
4. பாலிவுட்டில் நடிகரை விட நடிகைகளுக்கு அதிக சம்பளம் ஏன்?
பாலிவுட்டில் நடிகரை விட நடிகைகளுக்கு அதிக சம்பளம் என கூறப்படுகிறது
5. பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்யாதீர்கள் -தீபிகா படுகோனே சொல்கிறார்
பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள் என நடிகை தீபிகா படுகோனே கூறி உள்ளார்.