சினிமா செய்திகள்

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தெலுங்கு மொழியில் வெளியிட தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு + "||" + The picture of Thaana serntha koottam In Telugu language Requested to ban the release Today is the judgment of the case

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தெலுங்கு மொழியில் வெளியிட தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தெலுங்கு மொழியில் வெளியிட தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தெலுங்கு மொழியில் வெளியிட தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர்.

சென்னை,

நடிகர் சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு மொழியில் வெளியிட தடை கோரி ஸ்டார் மூவீஸ் நிறுவனம் சார்பில் சாந்தி தியாகராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவர் நடிகர் பிரசாந்தின் தாயார் ஆவார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டதாக கூறி தடை கோரிய மனுவை முடித்து வைத்தார். இதை எதிர்த்து சாந்தி தியாகராஜன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு மீது இன்று(புதன்கிழமை) தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர்.