சினிமா செய்திகள்

‘திமிர் பிடிச்சவன்’ படத்தில்விஜய் ஆண்டனி ஜோடி நிவேதா பெத்துராஜ் + "||" + Vijay Antony pair Nivedita Pethuraj

‘திமிர் பிடிச்சவன்’ படத்தில்விஜய் ஆண்டனி ஜோடி நிவேதா பெத்துராஜ்

‘திமிர் பிடிச்சவன்’ படத்தில்விஜய் ஆண்டனி ஜோடி நிவேதா பெத்துராஜ்
திமிர் பிடிச்சவன்’ படத்தில், விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், அவருக்கு ஜோடி நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.
நான் ஈ, பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களை டைரக்டு செய்த எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் உதவி டைரக்டராக இருந்தவர், கணேசா. இவர், ‘திமிர் பிடிச்சவன்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். இந்த படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“ஒரு இசையமைப்பாளராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய் ஆண்டனி, இப்போது கதாநாயகனாக பிரபலமாகி இருக்கிறார். ‘திமிர் பிடிச்சவன்’ படத்தில், அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். படத்தில், பயங்கரமான சண்டை காட்சிகள் இடம் பெறுகின்றன. ஒரு சிலம்ப சண்டையும் இடம் பெறுகிறது.

இதற்காக விஜய் ஆண்டனி, சிலம்பம் கற்று வருகிறார். எல்லா துறைகளிலும் பிரகாசித்து வரும் பன்முகத்தன்மைகளை கொண்டவர், அவர். தனது ஒட்டு மொத்த திறமைகளையும், உழைப்பையும் படத்தில் காட்டுகிறார். அவருடைய ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும், அதை தெளிவாகவும், சரியாகவும் செய்யக் கூடியவர். இந்த சிறந்த பண்புதான் அவருக்கு மேலும் மேலும் உயர்வை கொடுத்து வருகிறது.

இது, வழக்கமான போலீஸ் கதை அல்ல. சமகால இளைஞர்களின் நோக்கங்கள் எப்படியிருக்க வேண்டும்? என்பதை வலியுறுத்தும் படமாக இருக்கும். படத்தில், விஜய் ஆண்டனி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.”