சினிமா செய்திகள்

நடிகை அமலாபாலுக்கு தொல்லை மேலும் ஒருவர் கைது + "||" + Actress AmalaPaul is troubled One more arrested

நடிகை அமலாபாலுக்கு தொல்லை மேலும் ஒருவர் கைது

நடிகை அமலாபாலுக்கு தொல்லை மேலும் ஒருவர் கைது
நடிகை அமலாபாலுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரில் போலீசார் மேலும் ஒருவரை கைது செய்தனர். #AmalaPaul #Cinemanews
சென்னை, 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர், இன்று சென்னை  மாம்பலம் காவல் நிலையத்தில், தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக புகார் அளித்தார்.  

நடனப்பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட செல்ல வேண்டும் என அழைத்ததாக அமலா பால் புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தைச்சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது அமலாபால் தைரியமாக புகார் அளித்ததாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதற்கு நன்றி தெரிவித்து அமலாபால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

எனக்கு நேர்ந்த பிரச்சினையில் நடிகர் விஷால் ஆதரவாகவும் பக்கபலமாகவும் நின்றதற்கு நன்றி. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்பது அவர்கள் கடமையாகும். என்னை மாமிச துண்டு போன்று வியாபாரம் செய்ய அந்த நபர் முயன்றார். அவருடையை நடவடிக்கை எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.”

இவ்வாறு அமலாபால் டுவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை அமலாபாலுக்கு தொல்லை கொடுத்ததாக  கூறப்பட்ட  புகாரில் போலீசார் மேலும் ஒருவரை கைது செய்தனர். கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்த மலேசிய நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் சிக்கினார்