சினிமா செய்திகள்

இணையதளத்தில் வைரலாக பரவும்நயன்தாரா-விக்னேஷ் சிவன் நெருக்கமான புகைப்படம் + "||" + Nayan-Vignesh Shiva intimate photo

இணையதளத்தில் வைரலாக பரவும்நயன்தாரா-விக்னேஷ் சிவன் நெருக்கமான புகைப்படம்

இணையதளத்தில் வைரலாக பரவும்நயன்தாரா-விக்னேஷ் சிவன் நெருக்கமான புகைப்படம்
நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை திடீரென்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
யன்தாரா திரையுலகில் நம்பர்-1 நடிகையாக இருக்கிறார். சம்பளமும் ரூ.5 கோடியாக உயர்ந்துள்ளது. நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், ஒரே வீட்டில் அவர்கள் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபற்றி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால் அடிக்கடி இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இஸ்ரேல், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கு எடுத்துக்கொண்ட படங்களை வெளியிட்டனர். காதலர் தினத்தையொட்டி விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை நயன்தாரா திடீரென்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த படத்தில் நயன்தாரா தனது பெயரின் முதல் ஆங்கில எழுத்தான என் என்ற பெயரிலும், விக்னேஷ் சிவன் வி என்ற எழுத்திலும் டீ சர்ட்டுகள் அணிந்து இருந்தனர். இந்த காதல் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டர், பேஸ்புக்கில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.

நயன்தாரா ஏற்கனவே நடிகர் சிம்புவை காதலித்தார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் பிரபுதேவாவை விரும்பினார். அவரை திருமணம் செய்துகொள்வதற்காக மதம் மாறவும் செய்தார். ஆனால் அந்த காதலும் முறிந்துவிட்டது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

இருவரும் தற்போது ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.