சினிமா செய்திகள்

30 குழந்தைகளுக்கு தாயான நடிகை ஹன்சிகா + "||" + A mother of 30 children Actress Hansika

30 குழந்தைகளுக்கு தாயான நடிகை ஹன்சிகா

30 குழந்தைகளுக்கு தாயான நடிகை ஹன்சிகா
30 குழந்தைகளுக்கு தன்னை தாய் என நடிகை ஹன்சிகா கூறினார்.
நடிகை ஹன்சிகா சினிமாவுக்கு நடுவே சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது, வீடுகள் வாங்குவது, வியாபாரம் செய்வது என்று இருப்பவர்களுக்கு மத்தியில் சம்பளத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோருக்கு ஒதுக்கி உதவி செய்து வருகிறார். ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்தார். இப்போது அந்த குழந்தைகள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது:-

“இந்த உலகத்தில் குழந்தைகளை கஷ்டப்பட்டு பெற்றுத்தான் அம்மா ஆவார்கள். நானோ குழந்தை பெற்றுக்கொள்ளாமலேயே ஆதரவற்ற 30 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறேன். இது பெரிய பாக்கியம். எனது வயிற்றில் பிறக்காவிட்டாலும் இவர்கள் என்னுடைய குழந்தைகள்தான். நான்தான் அவர்களுடைய தாய்.

அம்மாவை காணாத அந்த குழந்தைகள் என்னைத்தான் தாயாக பார்க்கிறார்கள். அம்மா என்று என்னை அவர்கள் அழைப்பதை பார்த்து உருகிப் போகிறேன். அவர்களுடைய பராமரிப்புக்கு பணம் மட்டும் ஒதுக்கிவிட்டு சும்மா இருப்பது இல்லை. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர்கள் பக்கத்தில் இருக்கிறேன்.

பெற்றோரை பார்க்காத அந்த குழந்தைகளுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. வயதானதும் பெற்றோர்களை பிள்ளைகள் கைவிடும் போக்கு சமூகத்தில் உள்ளது. ஆதரவற்ற அந்த முதியோர்களுக்காக புதிய இல்லம் ஒன்றை கட்டி வருகிறேன். அவர்களை அங்கு தங்க வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளேன்.” இவ்வாறு ஹன்சிகா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. வேன் மீது லாரி மோதியது: தாய்-மகள் உள்பட 5 பேர் நசுங்கி பலி
உத்தர கன்னடா அருகே, வேன் மீது லாரி மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
2. தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேர் கைது
ஓசூரில், தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், 21 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
3. பீகார் அரசு தத்தெடுப்பு மையங்களில் பசி, தண்டனை போன்ற கொடுமைகளுடன் வாழும் குழந்தைகள்
பீகாரில் அரசு தத்தெடுப்பு மையங்களில் உள்ள சில குழந்தைகள் பசி, தண்டனை மற்றும் தகாத சொற்களால் திட்டுதல் ஆகிய கொடுமைக்கு ஆளாகின்றனர் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
4. ஏமனில் சவூதி கூட்டணி படை வான்வழி தாக்குதலில் 26 குழந்தைகள் பலி
ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரின் வான்வழி தாக்குதலில் 26 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
5. கேரளாவில் மழை வெள்ளம்: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 டன் சத்துணவு பாக்கெட்டுகள்
கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 டன் சத்துணவு பாக்கெட்டுகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியது.