சினிமா செய்திகள்

‘காலா’ படம் நஷ்டமா? நடிகர் தனுஷ் விளக்கம் + "||" + Actor Dhanush has said for the first time about the collection of the film kaala

‘காலா’ படம் நஷ்டமா? நடிகர் தனுஷ் விளக்கம்

‘காலா’ படம் நஷ்டமா? நடிகர் தனுஷ் விளக்கம்
காலா படத்தின் வசூல் குறித்து நடிகர் தனுஷ் முதல் முறையாக கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் 2,926 தியேட்டர்களில் திரையிட்டனர். வட இந்தியாவில் மட்டும் 1,413 தியேட்டர்களில் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் 720 தியேட்டர்களிலும், கேரளாவில் 243 தியேட்டர்களிலும் திரையிட்டனர்.

கர்நாடகாவில் 150 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 400 தியேட்டர்களிலும் வெளியானது. மும்பையிலும், சென்னையிலும் அதிக செலவில் அரங்குகள் அமைத்து காலாவை படமாக்கி இருந்தனர். முன்னணி நடிகர்-நடிகைகள், ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் இதில் நடித்து இருந்தனர். பெரிய தொழில் நுட்ப கலைஞர்களும் வேலை செய்தனர்.

சம்பளம் மற்றும் இதர செலவுகள் என்று இந்த படத்துக்கு ரூ.140 கோடி வரை செலவாகி இருக்கலாம் என்று பேசப்பட்டது. படம் வெளியானபோது ரசிகர்கள் உற்சாகத்தோடு படம் பார்த்தனர். வெளிநாடுகளிலும் படத்துக்கு வரவேற்பு இருந்தது. முக்கிய நகரங்களில் நல்ல வசூல் ஈட்டியது. இதனால் படம் லாபம் பார்த்து இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

ஆனால் காலா படத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றும், இதனால் வினியோகஸ்தர்களுக்கு தனுஷ் ரூ.40 கோடி திருப்பித்தர சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்றும் இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை தனுஷ் மறுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“காலா படத்தின் வசூல் குறித்து பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. காலா உண்மையாகவே வெற்றிபடம். எங்கள் வொண்டர்பார் பிலிம்ஸ் பட நிறுவனத்துக்கு லாபத்தை தந்து கொண்டிருக்கும் படமாகும். இந்த படத்தை தயாரிக்க வாய்ப்பு அளித்த சூப்பர் ஸ்டாருக்கும், வரவேற்ற பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.