சினிமா செய்திகள்

கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் + "||" + The song of AR Rukaman to spread on the social website

கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்

கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக  வலைத்தளத்தில்  பரவும் ஏ.ஆர்.ரகுமானின்  பாடல்
கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரெல்லாம் மூழ்கி கிடக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பக்கத்து மாநிலங்களில் இருந்து உதவிக் கரங்கள் நீள்கின்றன. தமிழ் நாட்டில் இருந்து நிவாரண பொருட்கள் குவிகிறது. தமிழ் நடிகர்–நடிகைகள் நிவாரண உதவி தொகை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடி உள்ள பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா சென்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் அங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தபா.. முஸ்தபா டோன்ட் ஒர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடினார்.

அந்த பாடலை முடிக்கும்போது முஸ்தபா என்ற வார்த்தைக்கு பதிலாக ‘கேரளா.. கேரளா.. டோன்ட் ஒர்ரி கேரளா.. காலம் நம் தோழன் கேரளா..’ என்று பாடினார். இதைக் கேட்டதும் அங்கு கூடி இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். இப்படி அவர் பாடியதன் மூலம் கேரள மக்களின் துயரம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பெருவெள்ளத்துக்கு பின் கேரளாவில் வறட்சிக்கு வாய்ப்பு: ஆய்வு செய்ய அரசு உத்தரவு
பெருவெள்ளத்துக்கு பின் கேரளாவில் வறட்சிக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
2. கேரளாவுக்கு மத்திய அரசு போதிய நிவாரணநிதி வழங்கவில்லை ராகுல்காந்தி குற்றச்சாட்டு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு போதிய நிவாரணநிதி வழங்கவில்லை என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
3. கேரளா: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்
கேரளாவில் வெள்ள பாதிப்புக்குள்ளாகி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். #KeralaFloods
4. பஞ்சாப்பில் இருந்து கேரளாவுக்கு 138 டன் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் இருந்து கேரள மழை வெள்ள நிவாரணத்திற்காக 138 டன் நிவாரணப் பொருட்கள் நேற்று ரெயில் மற்றும் ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
5. கேரளாவுக்கு ரூ.600 கோடி வழங்கியது முதல்கட்ட உதவிதான், மேலும் உதவிகள் வழங்கப்படும்: மத்திய அரசு
கேரளாவுக்கு ரூ.600 கோடி வழங்கியது முதல்கட்ட உதவிதான், மேலும் உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.