சினிமா செய்திகள்

வித்தியாசமான தோற்றத்தில் யோகிபாபு + "||" + Yogi Babu in a different look

வித்தியாசமான தோற்றத்தில் யோகிபாபு

வித்தியாசமான தோற்றத்தில் யோகிபாபு
கூர்கா படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

வடிவேலு, சந்தானம் ஆகியோர் கதாநாயகர்கள் ஆனதால் நகைச்சுவையில் ஏற்பட்ட வெற்றிடத்தை யோகிபாபு நிரப்பி இருக்கிறார். அவர் கைவசம் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. விஜய்யின் சர்கார், அஜித்குமாரின் விஸ்வாசம் படங்களிலும் நடிக்கிறார். சமீபத்தில் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலாவில் கல்யாண வயசு டூயட் பாடலும் பாடினார்.

இந்த படத்தில் அவரது காமெடிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் சாம் ஆண்டன் இயக்கும் ‘கூர்கா’ படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இதனை யோகிபாபு மறுத்தார். “எனது முகத்தை கதாநாயகனாக யாரும் ஏற்க மாட்டார்கள் இறுதிவரை காமெடியனாக மட்டுமே நடிப்பேன். கூர்கா படத்தில் முழுக்க நகைச்சுவை வேடத்திலேயே வருகிறேன். ஒரு வெளிநாட்டுக்காரரும் நாயும்தான் பிரதான கதாபாத்திரங்களாக இருக்கும்” என்றார்.

இப்போது கூர்கா படத்தில் யோகிபாபு நடிக்கும் தோற்றம் வெளியாகி உள்ளது. அதில் கூர்காவாக காக்கி உடை அணிந்து இருக்கிறார். அருகில் ஒரு நாயும் உள்ளது. படத்தில் நான் கதாநாயகன் இல்லை என்று யோகிபாபு மறுத்தாலும் அவரது புகைப்படத்தைத்தான் போஸ்டரில் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். படத்தின் தலைப்பையும் அவரது கதாபாத்திரத்தை கொண்டு கூர்கா என்றுதான் வைத்து இருக்கிறார்கள். எனவே யோகிபாபுதான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருவார் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா
உலக கோப்பை கிரிக்கெட் படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்க தேர்வாகி உள்ளார்.
2. ‘இந்தியன்-2’ படத்துக்காக வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால்
இந்தியன்-2 படத்துக்காக காஜல் அகர்வால் வர்ம கலை கற்று வருகிறார்.
3. ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசன் ஜோடி காஜல் அகர்வால்?
இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. சிக்கலில் ‘சர்கார்’ படம்
சிக்கலில் சர்கார் படம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. ‘பைரேட் ஆப் தி கரீபியன்’ படத்தில் இருந்து நடிகர் ஜானி டெப் விலகல்
பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் இருந்து நடிகர் ஜானி டெப் விலகினார்.