சினிமா செய்திகள்

‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா + "||" + '' I'm wondering Nayantara '' - Jyothika

‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா

‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.
 சிம்பு, பிரபுதேவாவுடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடி கட்டி பறக்கும் அவரது கால்ஷீட்டுக்கு பெரிய கதாநாயகர்கள் காத்து இருக்கிறார்கள்.


சமீபத்தில் திரைக்கு வந்த நயன்தாராவின் படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன. இதனால் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்திவிட்டார் என்கின்றனர். இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதாக பேசப்படுகிறது.

அவரது கைவசம் விஸ்வாசம், கொலையுதிர் காலம், தெலுங்கில் சைமா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் உள்ளன. நயன்தாராவின் வளர்ச்சி ஜோதிகாவையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘நயன்தாரா தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்து இருக்கிறார். இது பெரிய சாதனை. ஒரு பெண்ணாக தொடர்ந்து வெற்றிகள் பெற்று வருகிறார். எந்த நேரமும் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறார். அது எளிதான வி‌ஷயம் இல்லை. கதாநாயகர்களை முதன்மைப்படுத்தாத படங்களில் நடிக்கிறார்.

ஒரே நாளில் பல காட்சிகளில் நடித்து குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து கொடுக்கிறார். இது மிகவும் கடினமான செயல். நடிப்பது பெரிய கலையாக இருந்தாலும் பல தடைகளை தாண்டி குறிப்பிட்ட காலம் மற்றும் பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்து கொடுக்கும் நயன்தாராவை பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது.’’

இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.