சினிமா செய்திகள்

“ஐஸ்வர்யாராய்க்கே பாலியல் சீண்டல்” - பாடகி சின்மயி + "||" + "To Aishwarya rai sexual tease" - singer Chinmayi

“ஐஸ்வர்யாராய்க்கே பாலியல் சீண்டல்” - பாடகி சின்மயி

“ஐஸ்வர்யாராய்க்கே பாலியல் சீண்டல்” - பாடகி சின்மயி
ஐஸ்வர்யாராய்க்கே பாலியல் சீண்டல் நடந்ததாக பாடகி சின்மயி தெரிவித்தார்.

பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பலர் அதுகுறித்த தகவல்களை அவரது போனுக்கு அனுப்பி வருகிறார்கள். அதனை டுவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். நடன இயக்குனர் கல்யாண் பற்றி இலங்கை பெண் கூறியதாக பதிவிட்ட தகவல் உண்மையானது அல்ல என்று திடீரென்று மறுத்துள்ளார்.

பொய்யான தகவல் அனுப்பி பிரபலமானவர்கள் மீது விளையாட வேண்டாம் என்றும் கண்டித்துள்ளார். பாலியல் புகாரை முன்பே சொல்லாமல் இத்தனை வருடம் கழித்து சொல்கிறீர்களே என்று அவரை சிலர் விமர்சிக்கின்றனர். அதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, “நடிகை ஐஸ்வர்யாராய் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து 10 வருடத்துக்கு முன்பே தெரிவித்தார். யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. அவருக்கே அந்த நிலைமை என்றால் சினிமாவில் சாதிக்க துடிக்கும் நாங்கள் எப்படி அப்போதே கூறியிருக்க முடியும்” என்று தெரிவித்து உள்ளார்.

பாடகி சின்மயி கர்காடக இசை உலகிலும் அட்டூழியங்கள் நடக்கின்றன என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து சின்மயிக்கு கர்நாடக இசைகலைஞர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் கருத்துக்களை சின்மயி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் “சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் கண்ணியக்குறைவாக நடக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆதரவு தெரிவித்துள்ள இசைக்கலைஞர்கள் பட்டியலையும் சின்மயி வெளியிட்டு உள்ளார்.