சினிமா செய்திகள்

பீர் பாட்டில் காட்சிக்கு எதிர்ப்பு: நடிகர் விஷால் விளக்கம் + "||" + Opposition to the display of beer bottle: Actor Vishal interpretation

பீர் பாட்டில் காட்சிக்கு எதிர்ப்பு: நடிகர் விஷால் விளக்கம்

பீர் பாட்டில் காட்சிக்கு எதிர்ப்பு: நடிகர் விஷால் விளக்கம்
பீர் பாட்டில் வைத்திருக்கும் காட்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நடிகர் விஷால் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
விஷால் ‘அயோக்யா’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக ராஷி கன்னா வருகிறார். வெங்கட் மோகன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் விஷாலுக்கு போலீஸ் அதிகாரி வேடம். அவரது முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.


அதில் விஷால் பீர் பாட்டிலை கையில் வைத்து கொண்டு போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து இருப்பது போல் காட்சி உள்ளது. அருகில் துப்பாக்கியும் உள்ளது. இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. சுவரொட்டியாகவும் ஒட்டினர். இது சர்ச்சையாகி உள்ளது. பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கண்டித்தார்.

“விஷால் பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூக பொறுப்பு. பீர் பாட்டிலுடன் விஷால் தோன்றும் விளம்பரமும் முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு நடிகர் விஷால் விளக்கம் அளித்து கூறியதாவது:-

“அயோக்யா பட போஸ்டரில் கையில் பீர் பாட்டில் வைத்து இருப்பதை பார்த்து என்னை தவறாக கருத வேண்டாம். படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். ஒரு கொலையை துப்பு துலக்கும் காட்சியில் பீர் பாட்டில் கொலைக்கான ஆதாராமாக இருக்கலாம். அல்லது சண்டை காட்சியில் பயன்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கலாம். எனவே கையில் பீர் பாட்டில் இருப்பதை வைத்து வேறுமாதிரி யோசிக்க வேண்டாம். படம் வெளியாகும்போது உண்மை தெரியும்.’‘

இவ்வாறு விஷால் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் வழக்கு; மத்திய அரசின் எதிர்ப்பு பற்றிய தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ரபேல் வழக்கில், மத்திய அரசின் எதிர்ப்பு பற்றிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
2. வெள்ளாற்றின் நடுவே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
3. துறைமுகம் அமைக்க எதிர்ப்பு கன்னியாகுமரியில் போராட்டம்
கன்னியாகுமரியில் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. காசிமேட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு: வணிகர்கள் மனித சங்கிலி போராட்டம்
தக்கலையில் மேம்பாலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.