சினிமா செய்திகள்

“எனக்கு கணவராக வருபவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும்” - நடிகை ரகுல் ப்ரீத்சிங் பேட்டி + "||" + "My husband who is have 6 feet tall" - Actress Rakul preet singh interview

“எனக்கு கணவராக வருபவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும்” - நடிகை ரகுல் ப்ரீத்சிங் பேட்டி

“எனக்கு கணவராக வருபவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும்” - நடிகை ரகுல் ப்ரீத்சிங் பேட்டி
எனக்கு கணவராக வருபவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும் என்றும், தெலுங்கு பேச தெரிந்து இருக்க வேண்டும் என்றும் நடிகை ரகுல் ப்ரீத்சிங் தெரிவித்தார்.
“எனக்கு கணவராக வருபவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேச தெரிந்து இருக்க வேண்டும்” என்று நடிகை ரகுல் ப்ரீத்சிங் கூறினார்.

நடிகை ரகுல் ப்ரீத்சிங் நேற்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


“நான், பஞ்சாபி பெண். அப்பாவுக்கு ராணுவத்தில் வேலை. 2 வருடங்களுக்கு ஒருமுறை அப்பாவுக்கு வேலை மாறுதல் வரும். அதனால், எனக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்த அனுபவம் உண்டு. இப்போது என் குடும்பம் டெல்லியில் இருக்கிறது. நான், ஐதராபாத்தில் வசிக்கிறேன்.

எனக்கு அப்பா முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார். என்றாலும், அவரிடம் கேட்டுதான் எந்த முடிவையும் எடுக்கிறேன்.

நான் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அம்மாவுக்கு ஆசை. என் மூலம் பேரன்-பேத்திகளை பார்க்க வேண்டும் என்கிறார். இதற்காகவே விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி அம்மா வற்புறுத்துகிறார்.

உடனே திருமணம் செய்து கொள்வதற்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ‘பாய் ப்ரெண்ட்’ இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது எனக்கு காதல் இல்லை. வெறும் நட்பு மட்டும்தான். நான் விரும்புகிற மாதிரி ஒருவர் வந்தால், நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்.

எனக்கு கணவராக வருபவர், 6 அடி உயரம் இருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேச தெரிந்து இருக்க வேண்டும். எனக்கும், ராணாவுக்கும் காதல் இருப்பதாக சில தெலுங்கு பத்திரிகைகளில் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். ராணா, எனக்கு நல்ல நண்பர். அவருடன் எனக்கு காதல் இல்லை. இருவரும் நட்புடன் பழகி வருகிறோம்.”

இவ்வாறு ரகுல் ப்ரீத்சிங் கூறினார்.