சினிமா செய்திகள்

முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய்? + "||" + In Muthalvan Part-2 Vijay?

முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய்?

முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய்?
முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய் நடிக்க உள்ளாரா என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகம் வெளியானது. இப்போது இந்தியன் 2-ம் பாகத்திலும் நடிக்க தயாராகிறார். தேவர் மகனின் அடுத்த பாகமும் தயாராக உள்ளது.


சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வந்தன. விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து திரைக்கு வந்த முதல்வன் படத்தின் அடுத்த பாகம் தயாராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகி ஊழலை ஒழிப்பதுபோல் திரைக்கதை அமைத்து இருந்தனர்.

1999-ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. முதல்வன் படம் வெளியாகி 19 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்தை முடித்ததும் முதல்வன்-2 பட வேலைகளை ஷங்கர் தொடங்குவார் என்று தெரிகிறது.

டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் முதல்வன்-2 படத்தை எடுத்தால் கதாநாயகன் யார்? என்று நடிகை சுருதிஹாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு “ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் விரும்பினால் அவர்களை வைத்து எடுப்பேன். அவர்கள் இல்லையென்றால் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று ஷங்கர் பதில் அளித்தார். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளதால் விஜய்க்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார், விஜய்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார்.
2. சமூக வலைத்தளத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் கடும் மோதல்
விஜய், அஜித்குமார் இடையே நட்பு நிலவுகிறது. ஆனால் இருவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் நடக்கின்றன.
3. தீபாவளிக்கு விஜய், தனுஷ் படங்கள் மோதல்
தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய்யின் பிகில் தீபாவளிக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்தனர்.
4. ரசிகர்களை கவர்ந்த விஜய், அஜித் பட பாடல்கள்
விஜய்யின் பிகில், அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
5. தீபாவளிக்கு விஜய் - விஜய் சேதுபதி படங்கள் மோதல்
பண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களை ஒதுக்குவது இல்லை.