ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் இந்திரஜித்
ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிகர் இந்திரஜித் நடிக்க உள்ளார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்க்கை கதைகள் சினிமா படமாகும் சீசன் இது. நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி, இந்தி நடிகர் சஞ்சய்தத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை படங்களாகி ஏற்கனவே வந்துள்ளன.
மறைந்த ஆந்திர முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் பால்தாக்கரே, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மிதாலிராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், விஞ்ஞானி நம்பிநாராயணன் ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது. இந்த வரிசையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் சினிமா படமாக்க பாரதிராஜா, ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி ஆகிய 3 இயக்குனர்கள் இடையே போட்டி நிலவுகிறது.
பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனனை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்துக்கு ‘தி அயன் லேடி’ என்று பெயரிட்டுள்ளனர். ஜெயலலிதா நினைவு நாளன்று போஸ்டரையும் வெளியிட்டனர். இந்த படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் தேர்வாகி உள்ளார். இவர் நடிகர் பிருதிவிராஜின் அண்ணன். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.
Related Tags :
Next Story