சினிமா செய்திகள்

வாடகை வீட்டை காலி செய்ய கன்னட நடிகர் யஷ்சுக்கு கோர்ட்டு உத்தரவு + "||" + The court ordered the Kannada actor Yash to vacate the rented house

வாடகை வீட்டை காலி செய்ய கன்னட நடிகர் யஷ்சுக்கு கோர்ட்டு உத்தரவு

வாடகை வீட்டை காலி செய்ய கன்னட நடிகர் யஷ்சுக்கு கோர்ட்டு உத்தரவு
வாடகை வீட்டை காலி செய்ய கன்னட நடிகர் யஷ்சுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகர் யஷ். இவர் நடித்து சமீபத்தில் வெளியான கே.ஜி.எப். படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இவர், நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


யஷ் பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது தாய் புஷ்பாவுடன் வசித்து வருகிறார். மாத வாடகையாக ரூ.40 ஆயிரம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் யஷ் பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்து இருப்பதாகவும், அதை செலுத்திவிட்டு வீட்டை காலி செய்யும்படியும் உரிமையாளர் வற்புறுத்தினார்.

இதனால் அவருக்கும், நடிகர் யஷ்சுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் கர்நாடக கோர்ட்டில் யஷ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு வீட்டை காலி செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து யஷ்சின் தாயார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில் சொந்தமாக வீடு கட்டி வருகிறோம். கட்டுமான பணிகள் முடிவதுவரை 6 மாதங்கள் இந்த வீட்டில் வசிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு வீட்டு உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து 2 மாதங்கள் அவகாசம் வழங்கி மே மாதம் 31-ந் தேதிக்குள் வீட்டை காலி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.