சினிமா செய்திகள்

இந்தியாவுக்கு வரும் ‘அயன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர் + "||" + 'Iron man' Robert Downey Jr. Coming to India

இந்தியாவுக்கு வரும் ‘அயன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்

இந்தியாவுக்கு வரும் ‘அயன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்
‘அயன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர் இந்தியாவுக்கு வர உள்ளார்.

மார்வெல் படங்களில் அயன்மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருப்பவர் ராபர்ட் டவுனி ஜூனியர். இந்தியாவிலும் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ராபர்ட் டவுனி நடித்துள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் உலகம் முழுவதும் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.

அனைத்து சூப்பர் ஹீரோக்களும் நடித்துள்ள கடைசி பாகம் என்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி உள்ளார். அயன்மேனாக வரும் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு விஜய்சேதுபதி தமிழில் டப்பிங் குரல் கொடுத்துள்ளார். அவெஞ்சர்ஸ் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு பாடல் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ராபர்ட் டவுனி ஜூனியர் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லியில் உள்ள ரசிகர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

“இந்திய ரசிகர்கள் அனைவரும் அற்புதமானவர்கள். நான் இதுவரை இந்தியாவுக்கு வந்தது இல்லை. நிச்சயம் விரைவில் இந்தியாவுக்கு வருவேன். இந்தியா வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அனைத்து சூப்பர் ஹீரோ நடிகர்களும் ஒன்றாக நேரத்தை செலவிட்டோம். நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்ததை பிரிதிபலிக்கும் வகையில் எண்ட்கேம் படம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு - சுஷ்மா சுவராஜ்
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
2. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டையாடப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் உஷார்
இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.
4. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு
இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.