சினிமா செய்திகள்

சுற்றி வளைத்து ‘செல்பி’: ரசிகர்களிடம் இருந்து தப்பி ஓடிய மலைக்கா + "||" + Surrounded by 'Selfie': Malaika, who fled from the fans

சுற்றி வளைத்து ‘செல்பி’: ரசிகர்களிடம் இருந்து தப்பி ஓடிய மலைக்கா

சுற்றி வளைத்து ‘செல்பி’: ரசிகர்களிடம் இருந்து தப்பி ஓடிய மலைக்கா
சுற்றி வளைத்து செல்பி எடுத்த ரசிகர்களிடம் இருந்து நடிகை மலைக்கா தப்பி ஓடினார்.

பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா. இவர் மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில் இடம் பெற்ற ‘தக்க தைய்ய தைய்ய’ பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். நடிகர் சல்மான்கான் தம்பி அர்பாஸ்கானை காதலித்து 1998-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயது மகன் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.

இப்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவி மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரை மலைக்கா காதலித்து வருகிறார். மலைக்காவுக்கு 42 வயது. அர்ஜுன் கபூருக்கு 33 வயது. விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்தி படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி வருகிறார்.

இந்த நிலையில் மலைக்கா அரோரா தனது தந்தையுடன் மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு சென்று இருந்தார். அங்கு ரசிகர்கள் அவரை பார்த்ததும் சுற்றி வளைத்தனர். எல்லோரும் செல்போனை எடுத்து அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தார்கள். ரசிகர்கள் மத்தியில் சிக்கிய மலைக்கா அதிர்ச்சியானார். உடனே அவர்களிடம் இருந்து தப்பி வெளியே ஓடி அங்கு நின்ற காரில் ஏறிக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. செல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் - நடிகை நமிதா பிரமோத் வருத்தம்
செல்பி எடுப்பதாக கூறி உடம்பை தொடுகிறார்கள் என நடிகை நமிதா பிரமோத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
2. 55 லட்சம் பேரை ரசிகர்களாக கொண்ட பூனை
வித்தியாசமான தோற்றத்தை கொண்ட பூனை ஒன்று 55 லட்சம் பேரை ரசிகர்களாக கொண்டிருந்தது.
3. ஆபாசமாக பேசிய ரசிகர்களை சாடிய நிவேதா தாமஸ்
ஆபாசமாக பேசிய ரசிகர்களை நடிகை நிவேதா தாமஸ் சாடியுள்ளார்.
4. வழக்கு தொடர்பாக கைது செய்ய போலீசார் சென்றபோது, கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இலங்கை அகதி தப்பி ஓட்டம்
வழக்கு தொடர்பாக கைது செய்ய போலீசார் சென்ற போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இலங்கை அகதி தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-