சினிமா செய்திகள்

ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்துக்காக கோவா படப்பிடிப்பின்போது சிம்பு கொடுத்த ஒத்துழைப்பு! + "||" + For Hansika's 'Maha' movie Simbu's collaboration with Goa Shooting

ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்துக்காக கோவா படப்பிடிப்பின்போது சிம்பு கொடுத்த ஒத்துழைப்பு!

ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்துக்காக கோவா படப்பிடிப்பின்போது சிம்பு கொடுத்த ஒத்துழைப்பு!
ஹன்சிகா மோத்வானி இப்போது, ‘மஹா’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். கதாநாயகனாக சிம்பு நடிக்கிறார்.
மதியழகன் தயாரிக்கிறார். ஜமீல் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கோவாவில் நடந்தது. சிம்புவை வைத்து படம் தயாரித்து வரும் அனுபவங்களை தயாரிப்பாளர் மதியழகன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

“மஹா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக கோவா சென்றோம். சிம்பு-ஹன்சிகா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் மற்றும் காதல், சண்டை காட்சிகளை கோவாவில் படமாக்கினோம். காதலில் ஏற்பட்ட பிரிவையும், மீண்டும் ஒன்று சேர்வது போன்ற காட்சிகளையும் அங்கே படமாக்கி இருக்கிறோம்.,

படப்பிடிப்பு இடைவேளைகளில் சிம்பு ஓய்வு எடுப்பதற்காக மும்பையில் இருந்து கோவாவுக்கு கேரவனை கொண்டுவர ஏற்பாடு செய்தோம். கேரவன் வேண்டாம் என்று காரிலேயே சிம்பு ஓய்வு எடுத்தார். பகல் 12 மணியில் இருந்து நள்ளிரவு 12-30 மணிவரை தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தினோம். சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். மறுநாள் எத்தனை மணிக்கு வரவேண்டும்? என்று டைரக்டரிடம் சிம்பு கேட்டுவிட்டுத்தான் ஓட்டலுக்கு செல்வார்.”