சினிமா செய்திகள்

நடிகர் விஜய்யின் பிகில் பட தலைப்பு பற்றிய விளக்கம் வெளியானது + "||" + Actor Vijay Bigil movie title explanation

நடிகர் விஜய்யின் பிகில் பட தலைப்பு பற்றிய விளக்கம் வெளியானது

நடிகர் விஜய்யின் பிகில் பட தலைப்பு பற்றிய விளக்கம் வெளியானது
நடிகர் விஜய்யின் பிகில் பட தலைப்பு குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ரெபா மானிகா, ஆனந்தராஜ், தேவதர்ஷினி ஆகியோரும் உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இது விஜய்க்கு 63-வது படம் ஆகும்.

இந்த படத்தில் அவர், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் இதற்காக அமைத்து இருந்தனர். அதில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இதையொட்டி நேற்று மாலை படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்து வரும் 63-வது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.  இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் இரண்டாவது தோற்றமும் வெளியானது.

படத்தின் முதல் இரு போஸ்டர்கள் நேற்று வெளியான நிலையில், இன்று 3வது போஸ்டர் வெளியானது.  இந்த படத்தின் தலைப்பு பற்றி படக்குழுவினர் கூறும்பொழுது, வடசென்னை பகுதியில் குறிப்பாக ராயபுரம் ஏரியாவில், கால்பந்து போட்டிகளின் போது, நடுவர்கள் விசில் ஊதுவதை, பிகில் என அழைப்பதால், விஜய் படத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகுபலி-2 சாதனையை முறியடித்த நடிகர் விஜய்யின் பிகில் வசூல்; 3 நாட்களில் ரூ.100 கோடி
நடிகர் விஜய்யின் 'பிகில்' 3 நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து பாகுபலி-2 சாதனையை முறியடித்துள்ளது.
2. நடிகர் விஜய்யின் பிகில் படம் எப்படி உள்ளது?
பிகில் படத்தில் ராயப்பன் கேரக்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
3. நடிகர் விஜய்க்கு எப்போதும் துணையாக இருப்பேன் - சீமான்
நடிகர் விஜய்க்கு இப்போது மட்டுமல்ல எப்போதும் துணையாக இருப்பேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
4. `அன்று ராகுல், இன்று விஜய்' தமிழக ஆட்சியாளர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் -காங்கிரஸ் எச்சரிக்கை
தமிழக ஆட்சியாளர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக காங்கிரஸ் சார்பில் கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
5. நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் - திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி
நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.