சினிமா செய்திகள்

டைரக்டர்கள் ஆவேசம்; சீமான் நடித்த படத்தை வாங்க பயம் ஏன்? + "||" + Directors angry ; Why are you afraid to buy a movie starring Seaman?

டைரக்டர்கள் ஆவேசம்; சீமான் நடித்த படத்தை வாங்க பயம் ஏன்?

டைரக்டர்கள் ஆவேசம்; சீமான் நடித்த படத்தை வாங்க பயம் ஏன்?
இரட்டை டைரக்டர்கள் ஆர்.விஜய் ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் ஆகியோரின் இயக்கத்தில், ஆஸீப் பிலிம் இண்டர்நேஷனல் தயரித்துள்ள புதிய படம், ‘தவம்.’
‘தவம்’ படத்தில், டைரக்டர்-நடிகர்-அரசியல்வாதி சீமான் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் வசி, நாயகியாக புதுமுகம் பூஜாஸ்ரீ ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

விவசாயத்தை காப்பாற்றி எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி காட்டும் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் சீமான் நடித்து இருக்கிறார். இவருடைய திறமையான நடிப்பும், புத்திசாலித்தனமான திரைக்கதையும் படத்தில் வலுவான அம்சமாக அமைந்து இருக்கிறது. இருப்பினும் படத்தை வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி டைரக்டர்கள் விஜய் ஆனந்த், சூரியன் ஆகிய இருவரும் கூறியதாவது:-

“தவம் படம் வினியோகஸ்தர் களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தில், இன்றைய தமிழக சூழலை பிரதிபலிப்பது போன்ற சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. வியாபாரத்துக்கு ஏற்ற ஜனரஞ்சகமான காட்சிகளும் படத்தில் உள்ளன. படத்தை பார்த்த வினியோகஸ்தர்கள் பிரமித்து போனார்கள். அப்படியிருந்தும் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் தயங்குகிறார்கள்.

சில அரசியல்வாதிகளை பகைத்துக்கொள்ள நேரிடுமோ என்ற பயம்தான் இதற்கு காரணம் என்று தெரிகிறது. இருப்பினும், எப்படியாவது ‘தவம்’ படத்தை திரைக்கு கொண்டு வந்து விடுவோம். அதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.” 

தொடர்புடைய செய்திகள்

1. அறநிலையத்துறை அமைச்சர், குருக்களுக்கு தெரியாமல் ‘கோவில்களில் சிலைகள் திருட்டு எப்படி நடக்கும்’ - சீமான்
தமிழகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் குருக்களுக்கு தெரியாமல் கோவில்களில் சிலைகள் திருட்டு எப்படி நடக்கும்? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
2. தமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நீர்த்தேக்கங்களை பாதுகாக்க தவறியதுதான் காரணம் கொட்டும் மழையில் சீமான் பேச்சு
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நீர்த்தேக்கங்களை பாதுகாக்க தவறியதுதான் காரணம் என்று வேலூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
3. மோடி அரசின் ஒற்றை இந்தியா முயற்சி; இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட போர் - சீமான் அறிக்கை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி சீமான் பேட்டி
உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் கூறினார்.
5. தேர்தல் 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதால், சின்னத்தை பார்க்காமல் எண்ணத்தை கவனித்து வாக்களியுங்கள் - சீமான் பேச்சு
தேர்தல் 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதால், சின்னத்தை பார்த்து வாக்களிக்காமல் எண்ணத்தை கவனித்து ஓட்டுப்போடுங்கள் என்று சீமான் பேசினார்.