சினிமா செய்திகள்

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் நாளை வெளியாவதில் சிக்கல் இல்லை + "||" + Actor Vijay's Bigil Movie has no trouble releasing tomorrow

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் நாளை வெளியாவதில் சிக்கல் இல்லை

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் நாளை வெளியாவதில் சிக்கல் இல்லை
பிரேசில் என்ற தலைப்பில் தான் எழுதிய கதையை பயன்படுத்தி பிகில் படத்தை எடுத்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் மனுவில் திருத்தங்கள் உள்ளதால் புதிய மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

அட்லீ  இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்பட பலர்  நடித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு நாளை இத்திரைப்படம் ரிலீசாகிறது. இந்நிலையில் 'பிரேசில்' என்ற தலைப்பில் தான் எழுதிய கதையை பயன்படுத்தி பிகில் படத்தை எடுத்துள்ளதாக இயக்குநர் அம்ஜத் மீரான் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த மனுவில் தனது கதையையும், அட்லீ கதையையும் ஆராய்ந்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். படத்தின் கதையை பயன்படுத்தியதற்காக அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் திருத்தங்கள் உள்ளதால் புதிய மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 5-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பச்சமாங்கா: என்னை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா
என்னை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்க வேண்டாம் என நடிகை சோனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. தனுசுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்காக நடிகர் அக்ஷய்குமார் சம்பளம் 120 கோடி ரூபாய்
தனுசுடன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்காக நடிகர் அக்ஷய்குமார் 120 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. "உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள்" - ரஜினிகாந்துக்கு நடிகை குஷ்பு ஆதரவு
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
4. அஜித்துடன் இணைந்து நடிக்க முடியாதது மிகுந்த கவலை அளிக்கிறது- நடிகர் பிரசன்னா
நடிகர் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது மிகுந்த கவலையளிப்பதாக நடிகர் பிரசன்னா கூறி உள்ளார்.
5. அஜித் ரசிகர் ஆபாசமான ட்வீட் ; நடிகை கஸ்தூரி எச்சரிக்கை
அஜித் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.