அதிகம் வசூல் செய்த முதல் 10 தமிழ்ப் படங்களில் விஜய்யின் பிகில்


அதிகம் வசூல் செய்த முதல் 10 தமிழ்ப் படங்களில் விஜய்யின் பிகில்
x
தினத்தந்தி 31 Oct 2019 10:03 AM GMT (Updated: 31 Oct 2019 1:17 PM GMT)

அதிகம் வசூல் செய்த முதல் 10 தமிழ்ப் படங்களில் விஜய்யின் பிகில் இடம் பிடித்துள்ளது.

சென்னை

மெர்சல் மற்றும் சர்க்காருக்குப் பிறகு விஜய்யின் ரூ. 200 கோடியை எட்டிய மூன்றாவது படம் பிகில். இந்த  திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. இப்போது தமிழில் அதிக வசூல் செய்த படங்களில் எட்டாவது இடத்தில் பிகில்  உள்ளது.

இந்த பட்டியலில் ரஜினிகாந்தின் 2.0  முதலிடம்  வகிக்கிறது, இது பல மொழிகளில் இருந்தும் தனது வாழ்நாள் வசூலாக  625 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் எந்திரன் - தி ரோபோ (ரூ. 289 கோடி), கபாலி (ரூ. 286 கோடி). வசூலித்து உள்ளன.

சுவாரஸ்யமாக, பட்டியலில் முதல் மூன்று இடங்கள்  ரஜினியின் படங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. விஜய்யின் மெர்சல் ரூ.244 கோடியை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் அவரது சர்க்கார் தனது வாழ்நாளில் ரூ.243 கோடியை ஈட்டி 5-வது இடத்தில் உள்ளது.

ஷங்கரின் ஐ மற்றும் ரஜினிகாந்தின்  பேட்ட முறையே ரூ.239+ கோடி மற்றும் ரூ .222+ கோடியை வசூலித்து அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன. அத்தகைய உறுதியான தொடக்கத்துடன், பிகில் அதிகம் வசூலித்து முதல் ஐந்து தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் எளிதாக  நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிகில் இப்போது தென்னிந்தியாவில் அதிக  வசூல் செய்த திரைப்படங்களில் 14 வது இடத்தில் உள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1800+ கோடியை ஈட்டிய ராஜமவுலியின் பாகுபலி 2 இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் பிகில் தடுத்து நிறுத்த முடியாது.  இந்தப் படம் தமிழ்நாட்டில் சுமார் ரூ.90 கோடி வசூல் செய்துள்ளது.

Next Story