கன்னியாகுமரியில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை


கன்னியாகுமரியில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை
x
தினத்தந்தி 23 Nov 2019 5:46 AM GMT (Updated: 2019-11-23T11:16:21+05:30)

கன்னியாகுமரியில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள பேவாட்ச்சின் மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில் தற்போது புதிதாக நடிகர் விஜய் மெழுகுச் சிலை வைக்கப்பட்டு  உள்ளது. இது பார்வையாளர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் ஆளுயர மெழுகு சிலையைக் கண்டு ரசிக்க அவரது ரசிகர்கள் திரளாக வருகின்றனர்.

சார்லி சாப்ளின், அப்துல் கலாம், மைக்கேல் ஜாக்சன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ரவீந்திரநாத் தாகூர், மதர் தெரசா போன்றோரின் மெழுகுச்சிலைகள் ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

Next Story