சினிமா செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய ஷேன் நிகம்: விக்ரம் படத்தில் இருந்து நீக்கம் + "||" + Shane Nigam caught in controversy: Vikram removed from film

சர்ச்சையில் சிக்கிய ஷேன் நிகம்: விக்ரம் படத்தில் இருந்து நீக்கம்

சர்ச்சையில் சிக்கிய ஷேன் நிகம்: விக்ரம் படத்தில் இருந்து நீக்கம்
நடிகர் ஷேன் நிகம் சர்ச்சையில் சிக்கியதால், விக்ரம் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம். இவர் குர்பானி, வெயில் ஆகிய மலையாள படங்களில் நடித்து வந்தார். வெயில் படத்தில் ஷேன் நிகமுக்கு தலைமுடியை நீளமாக வளர்த்து நடிக்கும் கதாபாத்திரம். படப்பிடிப்பு முடியும் வரை தலைமுடியை வெட்ட கூடாது என்று இயக்குனர் சரத் கூறியிருந்தார்.

அதை மீறி படப்பிடிப்பு முடியும் முன்பே தலைமுடியை வெட்டி தோற்றத்தையும் மாற்றியதால் அதிர்ச்சியான தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். இதையடுத்து அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யவும் தடை விதித்தது.

இந்த நிலையில் தமிழில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடிக்க ஷேன் நிகமை ஒப்பந்தம் செய்து இருந்தனர். தமிழ் படத்திலும் அவரை நடிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதியது. இதை ஏற்று விக்ரமின் கோப்ரா படத்தில் இருந்து ஷேன் நிகம் நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக விக்ரம் படத்தில் நடிக்க மலையாள இளம் நடிகர் சார்ஜினோ காலித் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதன் படப்பிடிப்பில் சார்ஜினோ காலித் தற்போது பங்கேற்று நடித்து வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்ச்சை பேச்சு விவகாரம்: கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது.
2. வீரமே வாகையைச் சூடும்...வெளியானது கமலின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்...!
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
3. ஜெயலலிதா வாழ்க்கை கதை தலைவி படம் 2-ம் பாகம்?
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக தயாராகி உள்ள தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
4. ஹரீஸ் கல்யாண்-பிரியா பவானி சங்கருடன் ‘ஓ மணப்பெண்ணே’
காதலுக்கும், காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ள படங் களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தி யிலும் வரவேற்பு இருந்து வருகிறது என்பதற்கு உதாரணம், ‘பெல்லி சூப்புலு’ என்ற தெலுங்கு படம்.
5. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்.