சினிமா செய்திகள்

ஊரடங்கில், நடிகர் 2-வது திருமணம் + "||" + In curfew, the actor married 2nd

ஊரடங்கில், நடிகர் 2-வது திருமணம்

ஊரடங்கில், நடிகர் 2-வது திருமணம்
நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் என்பவர் ஊரடங்கில் 2-வது திருமணம் செய்துகொண்டார்.
சென்னை,

தமிழில் விஜய் மில்டன் இயக்கிய ‘கோலிசோடா 2’ படத்தில் நடித்தவர் செம்பன் வினோத் ஜோஸ். மலையாளத்தில் நாயகன் படத்தில் வில்லனாக அறிமுகமாகி 5 சுந்தரிகள், ஹேப்பி ஜர்னி, நார்த் 24 காதம், டபுள் பேரல், சார்லி, ஜல்லிக்கட்டு உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

மேலும் இவர், பகத் பாசில் மற்றும் நஸ்ரியாவுடன் நடித்த ‘டிரான்ஸ்’ படம் சமீபத்தில் ரிலீசானது. தற்போது ‘இட மழா காற்று’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘அங்கமாலி டைரீஸ்’ படத்துக்கு திரைக்கதை எழுதி உள்ளார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இவர் ஏற்கனவே சுனிதா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது இந்த கொரோனா ஊரடங்கில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மரியம் தாமஸ் என்பவரை செம்பன் வினோத் ஜோஸ் 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.

மலையாள நடிகர்-நடிகைகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கில் விவசாயம் செய்கிறேன் - நடிகை சமந்தா
நடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டின் மாடியில் தோட்டம் வைத்து செடிகள் வளர்த்து வருகிறார். அந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு.
2. ஊரடங்கில் முதன் முறையாக சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி சிறப்பு விமானம் - 210 பேர் பயணம்
ஊரடங்கால் முதன் முறையாக சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாக சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. இதில் 210 பேர் பயணம் செய்தனர்.
3. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.