சீனாவை சாடிய கங்கனா ரணாவத்


சீனாவை சாடிய கங்கனா ரணாவத்
x
தினத்தந்தி 29 Jun 2020 12:49 AM GMT (Updated: 29 Jun 2020 12:49 AM GMT)

நடிகை கங்கனா ரணாவத் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன படைகள் நடத்திய தாக்குதலை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலை பலரும் கண்டித்து வருகிறார்கள். சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல்கள் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன படைகள் நடத்திய தாக்குதலை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

“உங்கள் விரலையோ கைகளையோ யாரேனும் துண்டிக்க நினைத்தால் என்ன நடக்கும். அதுமாதிரியான ஒரு வேதனையை சீனா கொடுத்து இருக்கிறது. இந்திய ராணுவத்தினர் போராடுவது அவர்களுக்கானது, அரசாங்கத்துகானது என்று கருதுவது முறையா? அதில் எல்லோருக்கும் பங்கு இல்லையா. லடாக் நமது நிலப்பகுதி, நம்முடைய சொத்து. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாம் சீன பொருட்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும். சீனா முதலீடு செய்துள்ள நிறுவனங்களையும் ஒதுக்க வேண்டும். சீனா நமது நட்டில் வருமானத்தை ஈட்டி அவர்களுடைய ராணுவத்துக்கு ஆயுதங்களை வாங்குகின்றனர். எனவே நாம் அனைவரும் நம் நாட்டு பொருட்களை வாங்க வேண்டும். நமது அரசுக்கும் ராணுவத்துக்கும் பக்கபலமாக இருப்பது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.”

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறியுள்ளார். 

Next Story