சினிமா செய்திகள்

இணையதளத்தில் வைபவ்வின் ‘லாக்கப்’ நாளை வெளியாகிறது + "||" + Vaibhav's 'Lockup' will be released on the website tomorrow

இணையதளத்தில் வைபவ்வின் ‘லாக்கப்’ நாளை வெளியாகிறது

இணையதளத்தில் வைபவ்வின் ‘லாக்கப்’ நாளை வெளியாகிறது
இணையதளத்தில் வைபவ்வின் ‘லாக்கப்’ நாளை வெளியாக உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வந்தன. இந்தநிலையில் வைபவ், வெங்கட்பிரபு, வாணிபோஜன், பூர்ணா ஆகியோர் நடித்துள்ள லாக்கப் படமும் நாளை (14-ந்தேதி) இணையதளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார்.

இதுகுறித்து வைபவ் கூறும்போது, ‘துப்பறியும் திகில் கதையம்சம் உள்ள படம் லாக்கப். கதையும் கிளைமாக்சும் வித்தியாசமாகவும் எதிர்பாராத திருப்பங்களுடனும் இருக்கும். நானும் வெங்கட் பிரபுவும் போலீஸ் அதிகாரிகளாக வருகிறோம். திரைக்கதை விறுவிறுப்பாக நகரும். தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதோடு ரிலீசுக்கு பல பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையில் உள்ளன. எனவேதான் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்கிறோம். வீட்டில் குடும்பத்தோடு அதிகமானோர் லாக்கப் படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனது காட்டேரி, ஆலம்பனா ஆகிய படங்கள் தியேட்டரில் ரிலீசாகும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடைகளுக்கான நேரம் நாளை முதல் குறைப்பு
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. 'கர்ணன்' திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் நாளை வெளியாகும் - தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவிப்பு
தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் நாளை திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் நாளையும், வாக்குப்பதிவு நாளன்றும் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளையும், வாக்குப்பதிவு நாளன்றும் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
5. 3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை
3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை 9-ம் தேதி (செவ்வாய்கிழமை) தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.