சினிமா செய்திகள்

ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி + "||" + Hollywood actor kills Corona

ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி

ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி
ஹாலிவுட் நடிகரான டிரினி லோபஸ் கொரோனாவுக்கு பலியானார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோய்க்கு பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகருமான டிரினி லோபஸ் பலியாகி உள்ளார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசித்து வந்த இவருக்கு காய்ச்சலும் சளியும் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்தார். இவர் மேரேஜ் ஆன் த ராக்ஸ், த பப்பி இஸ் ஆல்சோ எ பிளவர், த டர்ட்டி டஜன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார். டிரினி லோபஸ் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஆலன் கார்பீல்டு, ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, ஹாலிவுட் நடிகைகள் பேட்ரிசியா பாஸ்வொர்த், லீ பியர்ரோ, அமெரிக்க பாடகர்கள் ஜோ.டிப்பி, ஜான் பிரைன், டிராய் ஸ்னீட், இங்கிலாந்து நடிகர் டீம் புரூக், நடிகை ஹிலாரி ஹீத், நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ், ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.15 கோடியாக உயர்ந்துள்ளது.
2. ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி விலை எவ்வளவு? ரஷியா அறிவிப்பு
‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி 95 சதவீதம் செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.94 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.11 கோடியாக உயர்ந்துள்ளது.
4. கொரோனாவை தடுக்க அவசர பயன்பாடாக சீனாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சீனாவில் கொரோனாவை தடுப்பதற்காக, அவசர பயன்பாடாக சைனோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு செலுத்தி உள்ளனர்.
5. அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று
அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.